தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறும்' என, முதல்வர் கருணாநிதி, டில்லியில் நேற்று முன்தினம் அறிவித்ததும், நெய்வேலியில், "கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார். தி.மு.க. அல்லது அ.தி.மு.க., கூட்டணியில், குறைந்தது, 35 தொகுதிகள் வேண்டும் என, பேரம் பேசுவதற்காக, ராமதாஸ், "இரட்டை வேடம்' அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். "பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, நாங்களும் முடிவு செய்யவில்லை' என, டில்லியில், முதல்வர் கருணாநிதி நேற்று புதிய கருத்தை தெரிவித்திருப்பதால், இது வரை தி.மு.க., அணியில் இருந்த பா.ம.க., எந்த அணிக்கு தாவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி விவகாரத்தில் இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்து, பேரம் பேசி, அதிக சீட்டுகளை பெற முடியும் என ராமதாஸ் கருதுகிறார்.
பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதா, வேண்டாமா என்பது குறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் தி.மு.க., பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்ய முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார். பா.ம.க., கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கு அ.தி.மு.க., தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தே.மு.தி.க., முடிவுக்கு பின் பா.ம.க.,வை பற்றி யோசிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பா.ம.க., பொதுக்குழு கூடும் என தெரிகிறது. அக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment