
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் இரு சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. தலைமை நீதிபதி ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக சாட்சிகள் விசாரணை நடந்தது. வழக்கு தொடர்பாக ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 8 பேர் நேற்று ஆஜராயினர். ஆனால், காஞ்சி சங்கரசரியார் உள்பட 17 பேர் ஆஜராகவில்லை. இவர்களில் வெங்கடேசன், மகாராஜன் ஆகியோர் முன்னர் அளித்த சாட்சியத்தை மாற்றி பல்டி அடித்தனர். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடக்கவுள்ளது. இந்த கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதி காஞ்சி சங்கராச்சாரியார் இந்த சாட்சிகளை விலைக்கு வாங்கிவிட்டார் என்று சொல்லபடுகிறது.
No comments:
Post a Comment