![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9usqbzzLoF_R9qgvTsNLAACzOIcf8Ogj-nzBcetu4xEpZZplK2pNmm59sNo6SnOOv3i6x4GR7-ZXmekuNxuCOkp1VGzoFSrboGTnqAX0rLS9GPwxssIzuxAzzLyR4KTmGnrvusNZXLzQ/s320/flash-seeman.jpg)
சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிமுக பக்கம் இழுத்தார் வைகோ. இப்போது சீமானின் முறை. தன் பங்குக்கு முஸ்லிம் அமைப்புகளான மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை ஆனார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. பழ நெடுமாறன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுகவுடன் கூட்டணி என்பதையும் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சீமான் சென்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவரை வரவேற்றார். த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி, இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், இலங்கை தமிழர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்புக்கு பின்னர் சீமான் கூறும் போது, சட்டசபை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்தார்
No comments:
Post a Comment