![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_VmrY6TpQBSs0-gPFtjlWk0NC0wWeceKQbTUskvpFeqgSC-RFUVK5KRVm5mpd69qQ3QUt0XXisxhRIhUhnhivfNcU3EcbU0MIiWr1OOuAe0unsifQIZq_z3eIJX0nmi92QpN7o3zQSHg/s320/how-to-buy-clothes-for-men.jpg)
லண்டன்:பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு, பெண்களின் உதவியை நாடுகின்றனர் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டனில் உள்ள "விசிட்பிர்மிங்காம்.காம்' இணையதளம் சார்பில், ஆடைகளை தேர்வு செய்வதில், ஆண்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக, 1,000 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், தங்களுடன் மனைவி அல்லது அம்மாவையும் ஆண்கள் ஆடையகங்களுக்கு அழைத்து வந்தனர்.அதுபோல், தங்களுக்கு என்ன ஆடை பொருத்தமாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. என்ன உடைகள் வாங்க வேண்டும் என்பது பற்றியும் அவர்களின் அம்மா அல்லது மனைவி தான் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் மனைவி சொல்வதையே ஏற்று, அவர்கள் சொல்லும் ஆடைகளையும் வாங்குகின்றனர்.
No comments:
Post a Comment