Jan 17, 2011
விநாயகரை வைத்து பாலியல் நிகழ்ச்சி!!!
நியூயார்க், ஜன.17- அமெரிக்காவில் பிரபலமான என்பிசி தொலைக்காட்சியில் இந்து கடவுளான விநாயகருக்கு அவமரியாதை செய்யும் வகையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பாக அந்த தொலைக்காட்சி நிர்வாகமும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்காவில் செயல்படும் இந்து மதவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. உலக இந்துத்துவ சங்கத்தின் தலைவரான ராஜன் ஜெத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஜனவரி 8-ம் தேதி என்பிசி தொலைக்காட்சியில் 'சேட்டர்டே நைட் லைவ்' என்னும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியில் விநாயகரின் உருவத்தை வைத்து செக்ஸ் குறித்த விளக்கம் அளித்தனர். எனவே, அந்த விடியோ காட்சியை உடனடியாக தனது இணையதளத்தில் இருந்து என்பிசி தொலைக்காட்சி அகற்ற வேண்டும். மேலும், என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஜெப் ஜூக்கர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் லோர்னே மைக்கேல்ஸ், நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகர்கள் ஜிம் கேர்ரி, கெனன் தாம்ஸன் ஆகியோர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment