கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற லங்காஇநியூஸ்.காம் பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகை மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை வரிசையில் உள்ளது லங்காஇநியூஸ்.காம் இந்த பத்திரிகை ஆங்கிலம் , சிங்களம், தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.கொழும்பு அருகே உள்ள இந்த இணையதள ஆபீசுக்கு வந்த மர்மக்கும்பல் ஒன்று அலுவலக முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் தீயை வைத்து கொளுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது. இதில் ஆபீசின் கம்ப்யூட்டர் அறை மற்றும் நூலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
பிரபல கார்ட்டூனிஸ்ட் மாயம்: இந்த இணையதள பிரபல கார்ட்டூனிஸ்ட் பிரகீத் என்பவர் காணாமால் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 பத்திரிகையாளர்கள் கொலை : அதிபர் ராஜபக்சே காலத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment