துபாய்,ஜன.24:'லோகோஸ் ஹோப்' என்ற கடலில் சஞ்சரிக்கும் கப்பலில் நடைபெறும் புத்தக கண்காட்சி துபாய் வந்தடைந்தது. 50 நாடுகளைச் சார்ந்த 400 பணியாளர்கள் இக்கப்பலில் உள்ளனர். புத்தகக் கண்காட்சி கப்பல் இரண்டு வருட சர்வதேச திட்டமாகும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இக்கப்பல் அபுதாபிக்கு செல்லும். இக்கப்பலில் பணிபுரியும் கேப்டன் உள்பட அனைத்து பணியாளர்களுமே சம்பளம் வாங்காமலேயே பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் பணியாளர்களில் பொறியாளர்கள்,ப்ளம்பர், புக் கீப்பர், சமையல்காரர்கள், தச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமூக சேவைகள் மூலமாகவும், இலக்கியம் மூலமாகவும் மக்களுக்கு உதவ இவர்கள் தயார். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்த வேளையில் இவர்கள் பள்ளிக்கூடம் நிர்மாணித்தல், நூல்களை இலவசமாக வழங்குதல், இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ க்ளீனிக் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment