உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.
“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.
விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!
இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.
நன்றி: வினவு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தகவலுக்கு மிக்க நன்றி...
எனக்குத் தன் சுடு சோறு ..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
Post a Comment