Dec 23, 2010

கொலைகாரப் படைக்கு" பிரிட்டன் பயிற்சி.

வங்க தேசத்தில் "கொலைகாரப் படை" என்று குற்றஞ்சாட்டப்படும் சிறப்பு காவல் துறையினருக்கு பிரிட்டிஷார் பயிற்சி அளித்தனர் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களை பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.அந்நாட்டில் ராபிட் ஆக்ஷன் பட்டாலியன் என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி அமெரிக்கா அப்படியான பயிற்சிகளை வழங்க மறுத்துவிட்டது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு காவல் படை 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது முதல் 550க்கும் அதிகமான கொலைகள் அவர்களால் செய்யப்பட்டுள்ளன என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்தச் சிறப்பு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யார் மீதும் இப்படியான கொலைகள் தொடர்பில் வழக்கு தொடரப்படவில்லை.

No comments: