கடும் எதிர்ப்பையும் மீறி லண்டன் வந்துள்ள ராஜபக்சேவுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால், ராஜபக்சேவை விமான நிலையத்தின் வேறு பகுதி வழியாக போலீஸார் வேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் ஹீத்ரூ விமான நிலையமே பரபரப்பானது.
உலகிலேயே மிகவும் பரபரப்பான, பிசியான ஹீத்ரூ விமான நிலையத்தை நேற்று தமிழர்களின் ‘படையெடுப்பு’ பெரும் பரபரப்பாக்கி விட்டது. ஒரு நாட்டின் தலைவரை இப்படி புறவாசல் வழியாக கூட்டிச் சென்றது ஹீத்ரூ விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. லண்டனுக்கு இனி ஒரு சிங்களத் தலைவர் படு சுதந்திரமாக வந்து போவது எளிதான காரியமல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நேற்று ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விரைவில் இலங்கையிலிருந்தும் தப்பி ஓட வேண்டிய நிலை வரப்போகிறது. இந்த இனவெறிக் கொலைவெறியனுக்கு. அதற்கான காலம் கனிகிறது.
Post a Comment