Nov 24, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு :இரண்டு பேருக்கு நீதிமன்றக்காவல்.

படம் : குஜராத்தில் எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் பென் ஒருவர் “ஜனநாயக இந்தியாவின் கோரமுகம் “
அஜ்மீர்,நவ.24:அஜ்மீர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்ட இருவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளாக கருதப்படும் முகேஷ் வாஸ்னி, ஹர்ஷத்பாய் சோலங்கி ஆர் எஸ் எஸ் உறுப்பினர் இருவரையும் முதன்மை ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையான ஏ.டி.எஸ் இருவரையும் குஜராத்தில் வைத்து கைதுச் செய்திருந்தது. 2002 குஜராத் பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலை வழக்கில் சோலங்கி குற்றவாளியாவார் என போலீஸ் தெரிவிக்கிறது.

நன்றி : தேஜஸ்

1 comment:

Anonymous said...

மரண ஓலங்கள்,
வழிந்தோடும் ரத்த ஆறுகள்,
சிதறிக் கிடக்கும் சதைகள்,
மண்டை ஓடுகள்,
பிய்த்து எறியப்பட்ட பிஞ்சுகள்,
சிதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள்..

நாறிக் கொண்டிருக்கிறது
நரேந்திர மோடியின்
இந்து மதவெறி.

நீதிக்காக காத்துக் கிடக்கிறது
குரலற்றவர்களின் குரல்

புதுவை கோ. சுகுமாரன்