சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு வந்தது. இப்போது இதே பரிசோதனை ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்க சர்க்கரை நோய் கழக ஆய்வில் சர்வதேச சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
பயன்கள்
எந்த நேரம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரே ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை உள்ளதா? இல்லையா என்று கண்டறிய முடியும். இரண்டு அல்லது மூன்று வேளை ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை முடிவு 6.5சதவீதத்துக்கு மேல் இருந்தால் சர்க்கரை உள்ளது என்று உறுதி செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் வரை இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 6 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், சர்க்கரை இல்லை என்று கூறலாம். சர்க்கரை அளவு உண்ணும் உணவை பொருத்து மாறுபடும். பரிசோதனைக்கு முன் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் சர்க்கரை அதிகமாக காட்டும். இதை வைத்து கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உள்ளது என்று தீர்மானம் செய்யக் கூடாது. இதனால் தான் இந்த புதிய பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பரிசோதனை அதிநவீன கருவிகளாக பயோரேட் d-10 அல்லது immunoturbidometry முறைகளில் செய்யப்பட வேண்டும். சாதாரண முறையில் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
உணவு முறை
நார்சத்து நிறைந்த உணவு. உதாரணம்: நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் மூன்று இட்லி, ஒரு கப் காய்கறி பொரியல், ஒரு கப் கூட்டு, ஒரு கப் சுண்டல், காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவதால், சாப்பிட்ட பின் சர்க்கரை 240 மி.கி.,லிருந்து 170 மி.கி., குறைந்துள்ளது. இந்த உணவு முறையே நமது ரிசார்ட் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. காய்கறி சேர்த்து சாப்பிடுவது இட்லி ஜீரணமாகும் தன்மை குறைந்து சர்க்கரை மெதுவாக ஏறுகிறது. நார்சத்து குறைந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி நல்லதல்ல. இந்த மாதிரி உணவு சாப்பிட்டால், குறைவான அளவு இன்சுலின் இருந்தாலும் சர்க்கரை ஏறாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இன்சுலின் வேலை செய்யும் திறன் அதிகம். இதனால் உடலில் குறைந்த அளவு இன்சுலின் இருந்தாலும் அது முழுமையாக திறமையாக பணி செய்ய முடியும். இன்சுலின் தசைகளுக்குள் உள்ளே குளுகோஸ் செல்ல உதவுகிறது மற்றும் தசைகளுக்குள் சென்ற குளுகோஸை சக்தியாக மாற்றுவது இன்சுலினின் முக்கிய பணி. சுரக்கும் இன்சுலின் 30 – 40 சதவீதம் தசைகளில் தான் வேலை செய்கிறது. இதற்கு உடற்பயிற்சி அவசியம்.
நன்றி : லங்கா ஸ்ரீ
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
uuefull news thanks
Post a Comment