Nov 20, 2010

பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!

பிரிட்டனில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரிடமிருந்து சுமார் 22 ஆயிரம் பவுண்ட்களை ஏமாற்றி பிரிட்டனில் இருந்து கேரளாவைச் சேர்ந்த இந்து சாமியார் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.ஹேமா பல்சோட் (வயது 37) என்ற அந்தப் பெண் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சங்கர் என்ற இந்து சாமியரிடம் முறையிட்டுள்ளார். உனக்கு பேய் பிடித்து உள்ளது. பேயை விரட்ட வேண்டுமெனில் பூஜை செய்ய வேண்டும் என்று சங்கர் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சை நம்பிய ஹேமா பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். உன்னுடைய குடும்ப நகைகள் அனைத்தையும் கொண்டு வா என சாமியார் கூற, பூஜை நடக்கும் இடத்தில் அதனை வைத்துள்ளார். பின்னர் ஹேமா வீட்டினுள் சென்ற போது சாமியார் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் என்று ஹேமா கூறுகிறார்.

பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சாமியாருடன் தொடர்பில் இருந்த போது, தமது வங்கியிலிருந்து கடனாகப் பெற்று 7 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்ததாகவும், பறிபோன நகைகளின் மதிப்பு 15 ஆயிரம் பவுண்டுகளுக்கும் அதிகம் எனவும் ஹேமா கூறுகிறார். சாமியார் சங்கர் தற்போது பிரிட்டனைவிட்டு வெளியே கேரளா வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டு வாயிலில் கிடந்த "சாமியார் சேவை" விளம்பர நோட்டீஸ் மூலமே சாமியார் சங்கரை அறிந்ததாக ஹேமா கூறுகிறார்.எத்தனை படித்தாலும் இழப்பது காசைமட்டுமல்லாது கர்ப்பையும் சேர்த்து?

2 comments:

Anonymous said...

samiyar endral ella samiyarum onruthan

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com