அயோக்கியனுக்காவது "சட்டத்தின் முன் மாட்டிக் கொண்டவன் என்ற அடையாளம் உண்டு. ஆனால் "கும்பகோண மடம்' என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்தியமடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்றுவரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.
இந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; ""ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாடி'' என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.அந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய "சங்கராச்சாரி யார்?', அருணன் எழுதிய "சங்கரமடத்தின் உண்மை வரலாறு' போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை.
பின்னாளில் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரியபோது அது மறுக்கப்பட்டது. சாமி ஜெயிலுக்குப் போவதா? என்று கேட்கிறார்களே?'' என்று கேட்டபோது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். ""ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கருமவினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்'' என்றார். திருட்டுச் செய்யலாம், கொலை செய்யலாம், அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு.
இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே? அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் அந்த இடத்தையே இடித்துப் தொல்பொருள் ஆராட்சி செய்து பார்த்து விட்டால் என்ன? புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா? அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா? எப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்?
குறிப்பு :"அயோத்திராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை!'' என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக ""சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்'' என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்த வேலை உங்களுக்கு தேவையான?. எங்களது நம்பிக்கையில் குறுக்கிடாதீர்கள். சாதியை ஒழிக்கிறேன் என்று பல ஆண்டுகளாக கூறினீர்களே. ஒழித்தீர்களா?. முதலில் அதை ஒழித்து விட்டு மற்ற வேலைகளை பாருங்கள். நாட்டிற்கு நல்லது செய்ய முயலுங்கள். நல்லது செய்யாவிட்டாலும், மக்கள் மனதை புண்படுத்தாதீர்கள். உங்களுக்கு தேவையானவை கள் சில மதங்கள் மூலம் கிடைக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக உள்ளீர்கள்.
Post a Comment