Sep 25, 2010

அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்தில் 16 ஆயிரம் பேர் பலி.

அமெரிக்காவில் செல்போன் பேசியபடியே வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் பெருமளவில் நடந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. வடக்கு டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் மைய பேராசிரியர்கள் பெரினாண்டோ வில்சன், ஜிம்ஸ்டிம்சன் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர்.

அப்போது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் 16 ஆயிரம் பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இந்த வழக்குகளில் 30 வயதுக்குட்பட்ட டிரைவர்கள் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.

No comments: