கொழும்பு: இலங்கையின் வன்னிப் பகுதியில் ஐ.நா. வாகனங்கள் செல்ல அந் நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது. வன்னிப் பகுதிகளில் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஐ.நா. முக்கிய பணியாற்றி வருகிறது. இதற்காக ஐ.நா. பணியாளர்கள் அந்தப் பகுதிகளுக்கு சென்று வர முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த அனுமதி மறுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஓமந்தை சோதனைச்சாவடியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஐ.நா. ஊழியர்கள் விண்ணப்பித்த போதும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்ததையடுத்து ஐ.நா. ஊழியர்களுக்கு இலங்கை இந்தத் தடையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment