Jul 26, 2010

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்.

தூத்துக்குடி : தூத்துக்குடி, வாகைகுளம் விமான நிலையம், 586 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்கான, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. தூத்துக்குடி அடுத்த வாகைகுளத்தில், தற்போது 100 ஏக்கரில் விமான நிலையம் அமைந்துள்ளது. தினமும் சென்னையிலிருந்து தனியார் விமானம் ஒன்று மட்டுமே, இங்கு வந்து செல்கிறது. இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்தி, இரவு நேர விமான சேவையை துவங்கவேண்டுமென தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, மேலும் 586 ஏக்கரில், நவீன வசதிகளுடன் இந்த விமான நிலையம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

No comments: