அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா இயக்கத்தினால் தாக்கப்பட்டமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னர் அனைத்து மேற்கத்தேய நாடுகளும், அனைத்து நாடுகளினதும் போராட்டக்குழுக்களுக்கு எதிராக தமது முன்னெடுப்புகளை ஆரம்பித்ததுடன் போராட்டக்குழுக்கள் தொடர்பிலான கொள்கைகளையும் அவை மாற்றிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழீழ விடுலைப்புலிகளுக்கான சர்வதேச உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியாது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment