வாஷிங்டன்: அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர். மாணவர்கள் என்ற போர்வையில் தங்கிக் கொண்டு உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கைதான பத்து பேருக்கும் ரஷ்ய உளவு அமைப்பு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு முக்கிய தகவல்களைப் பெற்று அவற்றை ரஷ்ய அரசுக்கு்க கொடுப்பதற்காக இவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்க அணு ஆயுதங்கள், ஈரான், அரசியல் கட்சிகள், சிஐஏ குறித்த தகவலக்ள், அமெரிக்க ஆயுத இருப்பு நிலை உள்ளிட்டவை குறித்து இவர்கள் முக்கிய தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுறுவுதல், உளவு பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment