கடந்த நூற்றாண்டில்(1900-1999) புகைத்தல் நளினமானதாக நாகரிகத்தின் வெளிப்பாடாக சிலருக்கு ஒரு ஆண் தன்மையாக கூட தோன்றியது. திரைப்படம் விளம்பரங்கள், புதுமை, கவர்ச்சி, புகைவிடும் அழகு எல்லாமே கவர்ந்திழுக்க புகைக்கதொடங்கியவர்கள் தொட்டால் தொடருமாக விட முடியாது தவித்தார்கள்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிகரட் கம்பனிகளாகிய பெரிய பணத்திமிலங்களினால் மூடிவைக்கப்பட்ட பல உண்மைகள் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டன.அதில் முக்கியமானது புகைத்தல் அடிமையாக்கும் என்பது. சுவாச நோய்களை உருவாக்கும் என்பது நீண்ட காலமாக தெரிந்திருந்தாலும் அதன் மற்றைய தாக்கங்கள் பற்றிய தெளிவுவரவும் அதை சட்ட ரீதியாக்கவும் அண்மையில்தான் முடிந்திருகிறது. இதில் முக்கியாமானது புகைபிடிப்பது புகைபவரை காட்டிலும் சூழ இருப்பவரை கடுமையாக பாதிக்கும் என்பதுதான். அதனால் பொது இடத்தில் புகைத்தல் ஒரு சமூகவிரோதச் செயலாகிவிட்டது. அனேக நாடுகளில் அது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு புள்ளிவிபரம் பிரித்தானியாவில் 120000 பேர் புகைபிடித்ததின் காரணமாக ஆண்மைக் குறைப்பாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இளவயதில் புகைக்கத்தொடங்கி நடுத்தர வயது வரும்போது ஆண்மைகுறைவால் ஆணுறுப்பு விறைக்காமை வந்துவிடுகிறது என்கிறது ஆய்வு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment