Apr 22, 2010

நக்ஸல்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது: மன்மோகன் சிங்.

இடதுசாரி நக்ஸலிசம் நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைக்கும் பேராபத்து மிக்கது என்று எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தில்லியில் புதன்கிழமை குடிமைப்பணிகள் தினத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: இடதுசாரி தீவிரவாதிகள் பின்பற்றும் நக்ஸலிசம் உள் நாட்டுப் பாதுகாப்புக்கே பேராபத்து விளைவிக்கக் கூடியது. சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நடந்த அண்மை சம்பவம் இதை உணர்த்தும் என்றார்.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியதில் 76 போலீஸôர் இறந்தனர். இதே மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து ஐந்து சிஆர்பிஎப் முகாம்கள் மீது நக்ஸல்கள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.இது தவிர மேற்குவங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஆந்திரம், ஒரிஸô, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்கள் பிரச்னை பெரும் சவாலாக விளங்கிவருகிறது. இந்த பின்னணியில் பிரதமர் மன்மோகன் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

நக்ஸலிசம் எங்கு வேர்விட்டு படர்கிறது என்று பார்த்தால் அது வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருக்கும் இடங்களில்தான். இதை நாம் புரிந்துகொண்டு பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்த முழு முனைப்பு காட்டவேண்டும். அந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னேற்றத் திட்டங்களின் பலன் போய்ச் சேர்வதை உறுதி செய்தாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments: