Apr 24, 2010

நக்ஸல் ஆயூததாரிகளால் 2009ம் ஆண்டு இந்திய ரயில்வேக்கு ரூ.500 கோடி இழப்பு.

நக்ஸல்களால் ரயில்வேக்கு 2009-ம் ஆண்டில் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் மம்தா அளித்த பதில்: 2008-ம் ஆண்டில் ரயில்வே மீது நக்ஸல்கள் 30 தாக்குதல்களை நடத்தினர். 2007-ம் ஆண்டில் இதுபோன்று 56 சம்பவங்கள் நடந்தன.

ஆனால் 2008-ம் ஆண்டைக் காட்டிலும் 2009-ம் ஆண்டில் ரயில்வே மீது நக்ஸல்கள் தாக்கிய சம்பவம் இரட்டிப்பானது. 58 தாக்குதல்களை அவர்கள் நடத்தினர். ரயில்வேயை குறிவைத்து அவர்கள் தாக்கினர். நாட்டிலுள்ள 65 ஆயிரம் கிலோமீட்டர் தூரமுள்ள ரயில்பாதைகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமைச்சகத்தால் கண்காணிக்க முடியாது. நம்மால் எவ்வளவு தூரத்துக்கு கண்காணிக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு மட்டுமே கண்காணிக்க முடியும். நக்ஸல்கள் தாக்குதலால் ரயில்வேக்கு 2009-ம் ஆண்டில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அப்பகுதிகளில் ரயில்வே அமைச்சகம் ரயில்களை இயக்கும் என்றார்.

No comments: