வாஷிங்டன்,பிப்.3: இந்த நூற்றாண்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதை எதிர்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா.
ஆசிய நாடுகளான சீனாவும், இந்தியாவும் அனைத்து விதத்திலும் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. எனினும் இவ்விரு ஆசிய நாடுகளோ, ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு சொந்தமான முதல் இடத்தை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோம் என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
பொருளாதார தேக்க நிலையால் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது கஷ்டம் நீங்கி, நல்வாழ்வு பெற வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியம் மீண்டும் உயர வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுற வேண்டும். அவ்வாறு எழுச்சியுறும் பொருளாதாரம் சிலருக்கு மட்டுமே பலனளிப்பதாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதையே நான் விரும்புகிறேன். அனைத்துவிதத்திலும் நாட்டை வலுப்படுத்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அயராது பாடுபடுவேன் என்றார் ஒபாமா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment