வாஷிங்டன், பிப். 4: தமது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி முகமை சோதனையிட இந்தியா அனுமதித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச முகமையுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதன்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பான அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அவர் புதன்கிழமை அனுப்பினார். இதன் மூலம் அணுசக்தி தொழில்நுட்ப வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட அதிபர் ஒபாமா பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
அணுசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 2008-ம் ஆண்டு கையெழுத்தானது. இது அமலுக்கு வர வகை செய்யும் கண்காணிப்பு ஒப்பந்தத்திலும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஆக்கபூர்வ பணிகளுக்கான அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியா தெரிவித்துள்ளது. அதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் ஓரிரு அம்சங்களில் மட்டும் இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.இவையும் தீர்க்கப்பட்டால் அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment