Feb 4, 2010

நிதி நெருக்கடி:​ ஆஸ்திரேலியாவில் 8 கல்லூரிகள் மூடப்பட்டன.

மெல்போர்ன்​​ பிப்.4:​ நிதி நெருக்கடி காரணமாக ஆஸ்திரேலியாவில் 8 ஆங்கில மொழிக் கல்லூரிகள் மூடப்பட்டன.​ இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.​ ​

மேலும் 530 மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட்டதால் 390 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.​ ​

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த 8 கல்லூரிகளும் திங்கள்கிழமை மூடப்பட்டன.இது குறித்து இயர்னஸ்ட் யங் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியது.​ கல்லூரிகள் மூடப்பட்டதால் சிட்னியில் 500 மாணவர்களும்,​​ பெர்த்தில் 480 மாணவர்களும்,​​ பிரிஸ்பேனில் 260 மாணவர்களும்,​​ கெய்ரன்ஸில் 150 மாணவர்களும்,​​ அடிலெய்டில் 130 மாணவர்களும்,​​ கோல்டு கோஸ்ட்டில் 265 மாணவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.​ ​பாதிக்கப்பட்டுள்ள 20 வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

2 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

தகவல் களஞ்சியமாக வெளிவரும் உங்கள் பிளாக்,அடுத்த வார பதிவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால்,உங்களைப் பற்றிய சிறு குறிப்பு வரைந்து,அனுப்பவும்.நன்றி

இப்னு அப்துல் ரஜாக் said...

http://penaamunai.blogspot.com/