பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன்.இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து வெளியுலகின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்துள்ளதுடன், அமெரிக்க கொள்கை வகுப்பளர்களுக்கும் அதனை உணர்த்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment