இலங்கையில் இறுதிக்கால யுத்தத்தில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர் வேற்றிவ் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வலியுறுத்தியுள்ளார்.
யுத்த விசாரணைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி காலத்தை கடத்தி வருவதாக குற்றம் சாட்டிய வில்லியம் ஹேக் இடம்பெயர்ந்த மக்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது இலங்கை இனப் பிரச்சினையை தீர்க்க உதவப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வில்லியம் ஹேக் வலியுறுத்தினார்.லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment