Feb 28, 2010

ஹெய்டி வெள்ளத்தினால் 8 பேர் பலி

ஹெய்டியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹெய்டிக்கு
தென்கிழக்கே உள்ள போர்ட் நகரில் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 1.5 மீற்றருக்கு மேல் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பற்றிற்கும் வெள்ள நீர் சென்றுள்ளதாகவும், அங்குள்ள 400 பேர் உடனடியாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹெய்டியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: