Feb 28, 2010

சிலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்வு.

அமெரிக்க சிலியில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளதாக சிலியின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன்,நிலநடுக்கத்தினால் சிலியில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மைக்கல் பசெலேட் தெரிவித்துள்ளார்.8.8 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் சிலியின் தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து பல கட்டடங்கள், பாலங்கள், வீதிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

No comments: