Feb 14, 2010

இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை: இ.எம்.அப்துற்றஹ்மான்.

தோஹா(கத்தார்):இடஒதுக்கீடு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அரசு வேலை வாய்ப்பிலும், கல்விநிலையங்களிலும் வழங்கப்படுவதாகும். இது இந்திய அரசியல் சட்டத்தால் உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஒன்றாகும். இது எவராலும் வழங்கப்படும் சலுகையோ அல்லது முன்னேறிய சமூகங்களுக்கு எதிரானதோ அல்ல என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.

நேற்று கத்தர் நாட்டின் தலைநகர் தோஹாவில் கிரசண்ட் ஆடிடோரியத்தில் "இடஒதுக்கீடு உரிமையா? சலுகையா?" என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தினார் அவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளான பிறகும் பிற்படுத்தப்பட்டோர் தொடர்ந்து ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டம், நீதி, நிர்வாகம் ஆகியத்துறைகளில் போதிய பிரதிநிதித்துவம் இன்றியே உள்ளனர். பல கமிஷன்களை மத்திய அரசு இதுத்தொடர்பாக நியமித்தபொழுது அவர்கள் கூறியது முஸ்லிம்கள் தலித்களை விட மோசமான நிலையில் உள்ளனர் என்று. இருந்தபோதிலும் அரசு அவர்களுடைய பிற்படுத்தப்பட்ட நிலையை போக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கான காரணத்தை கண்டறிந்தது. ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அதற்கான நிவாரணத்தைக் கூறியுள்ளது. இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் உரை நிகழ்த்தினார். முஹம்மது ரஷீத் இக்கூட்டத்திற்கு தலைமைத்தாங்கினார். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் ஷக்கீல் காக்வி வரவேற்றார். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் தலைவர் அப்துல் அஸீஸ் சுப்ஹான் நன்றியுரை நவின்றார்

No comments: