
கொழும்பு, பிப். 11: இலங்கை அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு நிதியுதவி செய்யவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச, ""இலங்கை அதிபர் தேர்தலின் போது அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகள் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தன. அவருக்கு நிதியுதவியும் வழங்கின. பொன்சேகாவுக்காக நார்வே தேர்தலில் பணத்தை செலவு செய்தது'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கூறியிருப்பதில் சிறிதளவு கூட உண்மையில்லை. இலங்கையில் இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கையில் கருத்துச் சுதந்திரம் வேண்டும். அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்று அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment