வாஷிங்டன்,பிப்.10: அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 2009-ம் ஆண்டின் இறுதிவரை சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது.
அதில், அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்கள் குறித்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருந்தனர். 2009-ல் மட்டும் 40 ஆயிரம் பேர் குடியேறியுள்ளனர். இதனால் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட்டது.
2008-ம் ஆண்டுவரை சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சம். இது, 2009-ல் 1 கோடியாகக் குறைந்தது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தநிலையில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களில் 60 லட்சம் பேர் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள்தான். இதையடுத்து, எல் சால்வடார் நாட்டவர் 5,3000 பேரும், குவாத்தமாலாவைச் சேர்ந்த 4,80,000 பேரும், ஹோண்டுராûஸச் சேர்ந்த 3,20,000 பேரும், பிலிப்பின்ஸ் நாட்டவர் 2,70,000 பேரும் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment