இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது. ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment