மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து மே 7ஆம் தேதிவரை 72 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடத்தி வரும் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட வேண்டும். அதற்குப்பதிலாக, பழங்குடியின பகுதிகளில் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார்.
மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை என்ற பெயரில், அப்பாவி மக்கள் மீதான இடைவிடாத வன்முறையை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment