ஆப்கான் தலைநகர் காபூலில் விடுதிகள் மீது ஆயுததாரிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இந்திய பிரஜைகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய ஆயுததாரிகள் ஆப்கன் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் இந்தியப் பிரஜைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களை இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் என்று ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய் கண்டித்துள்ளார்.
சிந்திக்க: இந்தியாவுக்கு தன்னுடைய உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்கவே வழியில்ல இதில் அயல்நாட்டு பிரச்சனைகளில் எல்லாம் தலையை விட்டு வீண்வம்பை விலைக்குவங்குவது. இந்தியாகுள் ஆயிரம் பிரச்சனைகள் பஞ்சாப் ஆயூததாரிகள் , உல்பா ஆயூததாரிகள், மக்கள் புரட்சி படை மாவேஷ்ட்டுகள், காஷ்மீர் ஆயூததாரிகள், இப்படி பல பிரச்சனைகள் இந்த லட்சணத்தில் இவர்கள் போயி பங்களாதேஷ் பிரச்சனை, இலங்கை பிரச்சனை, ஆப்கானிஸ்தான் பிரச்சனை, பாகிஸ்தான் பிரச்னை, நேபால் பிரச்சனை, இப்படி கண்டத்திலும் தலையை நுழைப்பது, தங்கள் ரா உளவு அமைப்பை பயன்படுத்தி அடுத்த நாட்டு பிரச்சனைகளில் வீணாக தலையிடுவது. இப்படி செய்தால் இதுமாதிரி தான் நடக்கும். இலங்கைக்கு அமைதி படை அனுப்பி அந்த நாட்டு தமிழ் மக்களை கொன்று குவித்து ராஜீவ் காந்தியை பலி கொடுத்தாச்சி, இந்தியாவை பாதுகாக்க இந்த ராவும், மற்ற உளவு அமைப்புகளும் செயல் பட்டு ஒழுங்கா இருந்தால் இந்தியா உருப்படும். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment