Feb 5, 2010
சிமிக்கெதிரான தடை: மேலும் 2 வருடத்திற்கு நீட்டிப்பு.
புதுடெல்லி:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கமான சிமிக்கெதிரான(SIMI) தடையை மேலும் 2 வருடத்திற்கு நீட்டியுதுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிமியின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்த பிறகே இத்தடை என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு சிமிக்கெதிரான தடை நீட்டிப்புச் செய்வது இது 5-வது முறையாகும்.
தற்போதைய தடை நாளை முடிவடையக் கூடிய சூழலிதான் இத்தடை நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்படி தடைக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ட்ரிபியூனல் (தீர்ப்பாயம்) ஒரு மாதத்திற்குள் அரசு நியமிக்க வேண்டும். ட்ரிபியூனல் 6 மாதத்திற்குள் தீர்மானம் எடுக்கவும் வேண்டும்.
உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம், பீஹார், டெல்லி, கேரள போன்ற மாநிலங்களில் சிமியின் செயல்பாடுகள் நடைபெறுவதாக மத்திய அரசு கூறுகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி பா.ஜ.க அரசு சிமியை தடைச்செய்தது.
பின்னர் 2003 ஆம் ஆண்டும், 2006 ஆம் ஆண்டிலும் இத்தடை நீட்டிக்கப்பட்டது. ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆதரவுடன் 1977 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிமியின் மீதான தடையை கடைசியாக நீட்டியது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமாகும். இத்தடைக்கெதிராக அப்பீல் அளித்ததைத் தொடர்ந்து கீதா மிட்டல் தலைமையிலான ட்ரிபியூனல் தடையை நீக்கியது. ஆனால் சில தினங்களுக்குள்ளாகவே ட்ரிபியூனல் சிமிக்கெதிராக தடையை நீக்கியதிற்கெதிராக மத்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க சுப்ரீம் கோர்ட் அதற்கு தடை விதித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment