Feb 5, 2010

சர்வதேச நெருக்கடியால் அமைதிப் பேச்சுக்கு இந்தியா சம்மதம்: பாக். பிரதமர்.


இஸ்லாமாபாத்,​​ பிப்.5:​ சர்வதேச நாடுகளின் நெருக்கடியினால்தான் அமைதிப் பேச்சுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி கூறினார்.

​ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான மொஷபராபாத்துக்கு வெள்ளிக்கிழமைச் செல்ல திட்டமிட்டிருந்த கிலானி,​​ இஸ்லாமாபாத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக தமது பயணத்தை ரத்து செய்தார்.​ பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

​ காஷ்மீர் பிரச்னையில் தீர்வு ஏற்பட்டு மக்கள் மத்தியில் அமைதி நிலவ வேண்டும்.​ இதற்கு அரசியல் ரீதியான அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே சிறந்தது என வலியுறுத்துகிறோம்.​ காஷ்மீர் விவகாரம் முக்கியமானதென்பதால் சர்வதேச நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன.

​ இப்பிரச்னை தொடர்பாக பாகிஸ்தான் மக்களின் கருத்து ஒருமித்ததாக உள்ளது.​ இருப்பினும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறோம் என்றார் அவர்.

No comments: