போர்ட்டோபிரின்ஸ்:பட்டினி மற்றும் கலவரத்தின் காரணமாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைத்தியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
பூகம்பத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடமோ அல்லது உணவோ வழங்க அதிகாரிகளால் இயலாதக் காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு செல்ல காத்திருக்கின்றனர்.
உணவிற்காகவும், ஆடைக்காகவும் கலவரம் துவங்கியதோடு உயிரை காப்பாற்றினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ஹைத்தியில் உள்ள குடும்பங்கள். பஸ்களிலும், ட்ரக்குகளிலும், படகுகளிலுமாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டுச்செல்கின்றனர். இந்தச்சூழலை பயன்படுத்தி பஸ்களிலும், ட்ரக்குகளிலும், படகுகளிலும் அளவுக்கதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஹைத்தி நாட்டவர்களின் 3 நாட்கள் சம்பளத்திற்கு இணையானவை இக்கட்டணம்.
உணவு விநியோகத்தில் ஒன்றிணைந்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்படாததால் உணவு வாகனங்களை தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க ராணுவம் நேற்று உணவு விநியோகத்தை துவங்கியுள்ளது.ராணுவம் நேற்று அதிபர் மாளிகையை நோக்கிச் சென்றுள்ளது.
பூகம்பம் ஏற்பட்டு 6 தினங்கள் கழிந்த பிறகும் இறந்த உடல்களை முழுவதும் மாற்றம் செய்யாததாலும், சுத்தமான தண்ணீர் கிடைக்காததாலும் ஹைத்தியில் தொற்று நோய் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் காலராவும், மலேரியாவும் மக்களை பாதித்ததாக செய்திகள் கூறுகின்றன. இதுவரை 90 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப்பணிக்கு மேலும் 2000 ராணுவ வீரர்களை அனுப்ப ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment