லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இருப்பதாகக் கூறப்படுவதை விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் மேலும் ஆறு வாரங்கள் கெடு விதித்துள்ளது.
முஸ்லிம் அல்லாத பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் மதம் மாற்றுவதற்காகவே காதலித்து பின்னர் அவர்களை மதம் மாற்றுகின்றனர். இதற்கென தனி இயக்கமே இருக்கிறது என்று ஊடகங்கள் எழுதியதை அடுத்து, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சிஐடி பிரிவு டிஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது லவ் ஜிஹாத் இயக்கம் குறித்து ஆதாரப்பூர்வ தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும், அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு மாத அவகாசம் வேண்டும் என்றும் காவல் துறையினர் கோரி இருந்தனர்.
இரண்டு மாத கெடு முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை செவ்வாய்க் கிழமையன்று நடைபெற்ற போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஸ்ரீதர ராவ் மற்றும் ரவி மாலிமத் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், லவ் ஜிஹாத் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக் காட்டினர். மேலும் இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment