Jan 19, 2010

இந்தியா மீது 'சைபர் போர்' தொடுக்கும் சீனா


டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த இணையங்களில் உள்ள தகவல்களை திருடவும், அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. இதை சீனா செய்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 15ம் தேதி இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்பு தொடர்பான அலுவலகத்தின் சர்வர்களை 'ஹாக்' செய்து நுழைய முயற்சி நடந்ததாக நாராயணன் கூறியுள்ளார்.
விரைவில் ஆளுநராக உள்ள நாராயணன் பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதை அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறையின் சர்வர்களை 'ஹாக்' செய்ய முயற்சி நடந்த அதே தினத்தில்அமெரிக்காவும் இதே போன்ற ஒரு 'சைபர் அத்துமீறலை' சீனா மூலமாக சந்தித்துள்ளது என்றார்.'ஹாக்' செய்பவர்களின் மூலத்தை துல்லியமாக கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் ஆனால் இதை செய்தது சீனா தான் என நம்புவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இந்த சைபர் அட்டாக், இ-மெயில் மூலம் வந்தது. ட்ரோஜன் வைரஸ் கொண்ட ஒரு பிடிஎஃப் அட்டாச்மென்ட் இந்த இ-மெயிலில் இருந்தது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை தூரத்தில் இருந்தபடியே டவுன்லோட் செய்யவும், அழிக்கவும் முடியும்.

இந்த வைரஸை அதிகாரிகள் கவனித்ததால் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க அமெரிக்க மற்றும் பிரிட்டனுடன் இந்தியா இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு மற்றும் கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை சீனா ஒட்டு மொத்தமாக மறுத்துள்ளது.எந்த விதத்தில் ஹாக்கிங் செய்தாலும் அது சீனாவில் சட்டப்படி குற்றம் என சிம்பிளாக முடித்துக் கொண்டார் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ.

சிந்திக்க: தான் கற்பு நெறி தவறி அலைந்ததால் எல்லாரும் அதுபோல் இருக்கவேண்டும் என நினைக்கிறார். எல்லா பெண்களுக்கும் சுந்தர்ஜிகள் கிடைக்க மாட்டார்களே.

No comments: