அதிகம் செலவு செய்யும் பழக்கத்துக்கு காரணம் அவர்களது மரபணு தான், என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். குறைந்த வருவாய் இருந்தாலும் அதிகம் செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். செலவை கட்டுப்படுத்த நினைத்தாலும் இவர்களால் முடிவதில்லை. இது குறித்து, லண்டன் பொருளாதார பயிற்சி மையமும், கலிபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து, 18 வயது முதல் 26 வயதுடைய, 2 ஆயிரத்து 500 ஆண், பெண்களிடம் ஆய்வு நடத்தின.
வங்கி இருப்பில் கணிசமான பணம் இருந்தாலும், அவ்வளவு பணத்தையும் செலவழிக்கும் இயல்புடைய இந்த இளைஞர்களிடம் சோதனை செய்ததில், அவர்களது மரபணு தான் இவர்களை செலவு செய்ய தூண்டுகிறது, என்ற விவரம் தெரிந்தது. "எம்.ஏ.ஓ.ஏ.,'என்ற மரபணு தான், சம்பந்தப்பட்ட நபர் சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அவரை விடுவதில்லை, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment