Dec 3, 2009

பாட திட்டத்தில் மத கருத்து இல்லை- தீவிரவாத இந்து முன்னணி புகாருக்கு அமைச்சர் பதில்

சென்னை: சமச்​சீர் கல்​விக்​கான பொதுப் பாடத்​திட்ட வரை​வில் எந்த ஒரு மதத்​திற்கு எதி​ரான கருத்​து​க்க​ளும் இடம்​ பெ​ற​வில்லை என்று பள்​ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்​கம் தென்​ன​ரசு விளக்கமளித்துள்ளார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாத்திக கருத்துக்களை புகுத்துவதாக தீவிரவாத இந்து முன்னணி புகார் கூறியிருந்தது.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்​ன​ரசு வெளி​யிட்ட அறிக்கை:

​சமச்​சீர் கல்​விக்கான பொதுப்​பா​டத் ​திட்ட வரைவு மாண​வர்​க​ளின் சிந்​த​னை திறனை வளர்த்து,​எதிர்​கால சிக்​கல்​களை தன்​னம்​பிக்​கை​யு​டன் எதிர்​கொள்​ளும் வித​மாக தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட அம்சங்க​ளையே உள்​ள​டக்​கி​யுள்​ளது. கல்லூரி பேரா​சி​ரி​யர்​கள்,​ கல்​வி​யா​ளர்​கள் மற்​றும் ஆசி​ரி​யர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பி​ன​ரின் கருத்​துக்​க​ளை​யும் பெற்று பரி​சீ​ல​னைக்கு உட்​ப​டுத்​தப்​பட்டு இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தின் அடிப்​ப​டை​யாக உள்ள மதச்​சார்​பற்ற தன்​மை​யி​னைக் கருத்​தில் கொண்டு பாடத்​திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

திரு​வா​ச​கம்,​ தேவா​ரம்,​ நாலா​யிர திவ்​விய பிர​பந்​தம்,​ பெரி​ய​பு​ரா​ணம் மற்​றும் கம்​ப​ரா​மா​ய​ண​மும் இறுதி செய்​யப்​பட்ட பாடத்​ திட்​டத்​தில்
இணைக்​கப்​பட்டுள்ளன. இஸ்​லா​மி​யர் வருகை,​ அவர்​க​ளின் ஆட்சி முறை மற்​றும் அவை​க​ளின் தாக்​கம் ஆகி​யவை இந்​திய வர​லாற்​றின் ஒரு கூறா​கும். இந்த அடிப்​ப​டை​யி​லேயே அவற்​றைப் பற்​றிய பாடங்​கள் வரை​வுப் பாடத்​திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. ​பெரி​யா​ரின் பகுத்​த​றிவு மற்​றும் சமு​தாய சீர்​தி​ருத்த சிந்​த​னை​களை மாண​வர்​கள் அறிந்து கொள்ள வேண்​டி​யது அவ​சி​யம் என்ற அடிப்​ப​டை​யில்

பெரி​யாரின் கருத்​துக்​கள் மற்​றும் அவ​ரது வாழ்க்கை வர​லாறு பொதுப் பாடத்​திட்ட வரை​வில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.தமி​ழ​கத்​தில் தற்​பொ​ழுது நடை​மு​றை​யில் உள்ள பாடத்​திட்​டத்​தி​லும் பெரி​யார் பற்​றிய பாடம் இடம்​ பெற்​றுள்​ளது. பொதுப் பாடத்​திட்ட வரை​வில் இந்து மதத்​திற்குஎதி​ரா​கவோ அல்​லது எந்த ஒரு மதத்​திற்​கும் எதி​ரான கருத்​து​களோ இடம் ​பெ​ற​வில்லை என்று
கூறி​யுள்​ளார்.

No comments: