Dec 9, 2009
முஸ்லிம்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவ வேண்டும்: தீவிரவாதி பால் தாக்கரே
மும்பை: பிரதமர் பதவிக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும் என்றால் முதலில் அந்த சமுதாயம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சம்மதிக்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று தீவிரவாதி பால் தாக்கரே கூறியுள்ளார்.
சமீபத்தில், தகுதி உடைய முஸ்லீம் ஒருவர் தாராளமாக இந்தியாவின் பிரதமராக முடியும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.இதுகுறித்து பால் தாக்கரே தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கம்...
முதலில் முஸ்லீம் சமுதாயத்தினர் ராமர் கோவில் கட்ட சம்மதிக்கட்டும், ஆதரவு தரட்டும், ஒத்துழைக்கட்டும். அப்படி செய்ய முன்வந்தால் முஸ்லீம் ஒருவர் பிரதமராக வருவதில் யாருக்கும், எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.
ராகுல் காந்தி இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல. முஸ்லீம்கள் பொது சிவில் சட்டத்திற்கு உடன்பட வேண்டும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முன்வர வேண்டும், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உதவ வேண்டும், வந்தேமாதரம் பாட முன்வர வேண்டும். அதன் பிறகுதான் பிரதமர் பதவிக்கு அவர்கள் தகுதியானவர்களாக மாற முடியும்.
முஸ்லீம்களை சில அரசியல் தலைவர்கள் தாஜா செய்வதைப் பார்க்கும்போது இனியும் இந்திய மதச்சார்பற்ற நாடாக திகழும் என்பதை நம்புவதற்கில்லை. அறிவிக்கப்படாத இஸ்லாமிய நாடாக இந்தியா மாறி வருகிறது என்றே சொல்ல வேண்டும் என்று எழுதியுள்ளார் தாக்கரே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment