புதுடெல்லி: கோவா மாநிலத்திலுள்ள மார்கோவாவில் ஹிந்துத்தீவிரவாத அமைப்பான சனாதன் ஸன்ஸ்தா நடத்திய குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு ஏஜன்சி ஏற்றது
பிற மாநிலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளிலும் இவ்வமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்படை உருவாக்கி என்.ஐ.ஏ விசாரணையை துவக்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் என்.ஐ.ஏ பொறுப்பேற்றுக்கொண்ட முதல் வழக்கு இது.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலம் நந்தத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐக்கு அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கோவா மாநிலம் மார்கோவாவில் குண்டுவெடிப்பு நடந்தது. தீபாவளிக்கு முதல்நாள் கோலாகலங்கள் நடைபெறும்பொழுதுதான் குண்டுவெடித்தது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சனாதன் ஸன்ஸ்தாவின் மெல்குண்டா பட்டேல், யோகேஷ் நாயக் ஆகியோரும் அடங்குவர். ஏற்கனவே கோவா மாநில அரசு புலனாய்வை என்.ஐ.ஏ வுக்கு மாற்றுவதாக கடிதம் எழுதியிருந்தது. வழக்கை பதிவுச்செய்த ஏஜன்சி போலீஸ் அதிகாரிகளிடமிருந்து விவரங்களை சேகரிக்க புலனாய்வுக்குழுவை கோவாவிற்கு அனுப்பியது.
குண்டுவெடிப்பில் சனாதன் ஸன்ஸ்தாவின் பங்கு தெளிவான சூழலில் வழக்கை என்.ஐ.ஏ வுக்கு மாற்றுவது அத்தியாவசியமானது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் கோயில்நகரம் என்றழைக்கப்படும் போண்டா பகுதியில் ராம்நதி தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம்தான் சனாதன் ஸன்ஸ்தா.மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூருக்கு இவ்வமைப்புடன் தொடர்புள்ளது. முன்பு இவ்வமைப்பு மஹாராஷ்ட்ராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. ஏற்கனவே கோவா மாநில சிறப்பு புலனாய்வுக்குழு மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியதாக 4 சனாதன் தீவிரவாதிகளை கைதுச்செயதனர். புலனாய்வு சம்பந்தமான ஆதாரங்களை தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment