கோழிக்கோடு:நீதிமன்றங்கள் மதவெறியர்களின் கையாளாக மாறிவிடக்கூடாது என்று கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் நாஸிருத்தீன் எழமரம் தெரிவித்தார்.
கேரள காவல்துறையும், மாநில உளவுத்துறையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க புலன் விசாரணை நடத்தியது. பின்னர் “லவ் ஜிஹாத்” சுத்தப்பொய் என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபிறகும் ஒரு மத சமூகத்தின் நற்பெயரைக்கெடுக்கும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.சங்கரன் விமர்சித்திருப்பது விபரீதமானது.
காவல்துறை வழங்கிய ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் இணையதளங்களிலும், சில பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட அவதூறுப்பிரச்சாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி கெ.டி.சங்கரன் நீதித்துறையையே அவமதித்துள்ளார்.
14 மாவட்டங்களிலிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை மனதில்கொண்டு மத காழ்ப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். நீதிபதியின் இத்தகைய விமர்சனங்களை உச்சநீதிமன்றத்தில் கேள்வியெழுப்புவோமென நஸிருத்தீன் கூறினார்.
கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு புறம்பானது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதமாற்றம் செய்யும் அமைப்பு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சட்டத்திற்கு உட்பட்டு சாதாரண சில மதமாற்றங்களை பற்றித்தான் நீதிபதி கெ.டி சங்கரன் கேள்வியெழுப்புகிறார். இது எல்லா மதபிரிவுகளிலும் நடந்துவரும் ஒன்றுதான்.
நீதிபதியின் இந்த விமர்சனம் நீதிமன்றங்களையும், சட்டத்தையும் மதிப்பவர்களுக்கு விடுத்துள்ள சவால் என்று நாஸிருத்தீன் சுட்டிக்காட்டினார். நீதிபதியின் இத்தகைய விமர்சனத்தில் உயர்நீதிமன்றமே தலையிட்டு தானாக முன்வந்து திருத்தும் என எதிர்பார்ப்பதாக நஸிருத்தீன் மேலும் தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment