கொழும்பு: இலங்கையில் ரயில்வே பாதை அமைப்பது போன்ற பணிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை ஓய்ந்த பின், தமிழர்கள் வாழும் பகுதியில் ரயில் பாதை, சாலை அமைப்பது போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணிகளில் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையே 56 கி.மீ., நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 1,200 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தில் நடக்கும் இப்பணியை சீன தொழிலாளர்கள் செய்ய உள்ளனர்.இதே போல வன்னி பகுதியில் உள்ள ஓமந்தை பகுதியிலும் 900 கோடி ரூபாய் செலவில் தண்டவாளம் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதையும் சீன தொழிலாளர்கள் தான் செய்ய உள்ளனர்.பணிகள் துவங்கிய பின் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் 25 ஆயிரம் சீன வீரர்கள் ஈடுபடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது
இலங்கையில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு உதவிகள் செய்த சீனா இலங்கையில் தனது ராணுவ தளத்தை நிறுவ முயற்சி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment