Nov 15, 2009
மணிப்பூர் ஹிந்து தீவிரவாதிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கும் சம்மந்தம் உண்டா? போலீஸ் தீவிர விசாரணை.
இம்பால் (மணிப்பூர்), நவ. 15: மணிப்பூர் மாநிலத்தில் போலீஸôர் நடத்திய சோதனையில் மணிப்பூர் ஹிந்து தீவிரவாதிகளின் மிகப்பெரிய ஆயுதக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த மணிப்பூர் ஹிந்து தீவிரவாதி களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கும் சம்மந்தம் உண்டா என்பதை பற்றி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தோபால் மாவட்டத்தில் ஹிந்து தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸôர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ஆயுதக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 வெடிகுண்டுகள், 16 துப்பாக்கிகள், 2500 வெடிபொருள்கள், 56 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 3 வயர்லெஸ் போன்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment