Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Dec 11, 2011

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 2).

* இது ஒரு அழகிய நிலா காலம்*

முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள் பள்ளி படிப்பை முடித்து திருநெல்வேலியில் உள்ள ஜோன்ஸ் கல்லூரியில் தங்களது கல்லூரி வாழ்க்கையை துடங்கினர். கல்லூரியில் ஹொஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தனர்.

அதுஒரு கோடைக்கால விடுமுறை, நண்பர்கள் சந்தோசமாக ஊருக்கு புறப்பட்டனர். திருநெல்வேலி இருந்து இராமநாதபுரம் போகும் பேருந்தில் பயணித்தனர். ஒருவருக்கொருவர் கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி பேசி சந்தோசமாக சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்களை, உண்டாக்கப்போகும் நமது வரலாற்று நாயகர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

1) முத்துக்குமாரின் தந்தை மாணிக்கம் பெரியபட்டினம் கடை வீதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். முத்துகுமாருக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் செல்வி, அம்மா பெயர் தங்கம் இவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். முத்து குமாருக்கு ஒரு பத்திரிக்கையாளனாக வரவேண்டும் என்பதே இலட்சியம்.

2) முருகனின் தந்தை இரத்தின பாண்டி இவர் அந்த ஊரில் பரம்பரை பணக்காரர். நிறைய சொத்துக்கள், பண்ணை வீடு, கார்வசதி என்று வளமாக இருப்பவர். முருகனின் தம்பி ராஜா, தங்கை தமிழரசி அவனின் அம்மா செர்ணம்.  முருகன் வீட்டின் தலைதனையன் அவனது அப்பாவுக்கு அவனை டாக்டர் ஆக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முருகனுக்கோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க  ஆசை.

3) இளங்கோவன் தந்தை கிறிஸ்டோபர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். தின கூலிக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர். இவரது மனைவி ரோஸ் மேரி, இவருக்கு யாழினி, மலர்விழி என்று இரண்டும் பெண்பிள்ளைகளும் உண்டு. இளங்கோவன்தான் வீட்டின் மூத்த பையன். இவனது தந்தையார் சிறந்த தமிழ் ஆர்வலர் அதனாலேயே பிள்ளைகளின் பெயர்களை செந்தமிழில் வைத்திருந்தார்.

4) அந்தோணியின் தந்தை தாசப்பன், இவருக்கு சொந்தமாக பல மீன்பிடி படகுகள் இருந்தன. ஊரிலே பெரும் புள்ளி. இவருக்கு மீன் வியாபாரம் முக்கிய தொழில். சொந்தமாக மூன்று பெரிய லாரியும், இரண்டு சிறிய வேன்களும் உண்டு. இவனது அம்மா ஸ்டெல்லா, அண்ணன் மரியதாஸ் தங்கை பிருந்தா. அந்தோணியின் ஆசை IPS  ஆகவேண்டும் என்பது. 

5) பசீர் உடைய வாப்பா முஸ்தபா தமிழ் ஆசிரியர், உம்மா நூர்ஜகான் கணித ஆசிரியை இவர்கள் இருவரும் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்தார்கள். பஷீரின் தங்கை  சபினா, தம்பி கலீல், இவனை ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். ஆனால் பஷீருக்கோ ஜெனடிக் இஞ்சினியரிங் படிக்க ஆசை.

6) ஆசாத் உடையாவாப்பா அரசியல்வாதி, பெரியபட்டினம் பஞ்சாயத்து தலைவர், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர், காந்தியவாதி. ஆசாத் வீட்டிற்கு ஒரு மகன், இவனது அம்மா பாத்திமா இவனுக்கு கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்பது ஆசை. 

7) மாலதி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள், தந்தை செல்வம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர். மாலதியின் அம்மா முத்து குமாரி அண்ணன் புகழ் என்கிற புகழேந்தி MA வரலாறு படித்து விட்டு தந்தைக்கு தொழில் உதவியாக இருக்கிறான். மாலதிக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது கனவு.

நண்பர்கள் ஏழுபேரின் வாழ்க்கையை காலம் எப்படி மாற்றி போடப்போகிறது என்று பார்ப்போம்.  தொடரும்..........
 நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.
 

Dec 1, 2011

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1).

அன்புள்ள வாசக நெஞ்சங்களே! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.

நான் இதற்க்கு முன்பு கதை எழுதியது இல்லை. இதை கதையாக  எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். வாசகர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் கருத்துக்களை ஆவணமா பதியுங்கள்!

உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம்.  நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

இரண்டாயிரத்தி பதினைந்தாம்  ஆண்டு அதை ஒரு இருண்ட காலம்  என்று சொல்லலாம். சிங்கள இனவெறி ராணுவத்தால் ஈழத்திலே நம் உறவுகள் ஒரு பாரிய இனஅழிப்புக்கு  உள்ளாக்கப்பட்டு வந்தார்கள். தமிழக மீனவர்கள்  தினம் தினம் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். வடஇந்திய ஹிந்தி அரசு தமிழகத்தின் வளங்களை சூறையாடியது.

தமிழகம் எங்கும் உயிர்கொல்லி நச்சு தொழில்சாலைகள் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டம் தோறும் அணுவுலைகள்! வால் மார்ட் முதல் ஸ்டார்பக்ஸ் வரை அந்நிய முதாளிகளின் வரவு! நமது சில்லறை வியாபாரிகளின் சாவு. தமிழர்களின் ஜீவநதிகள் எல்லாம் வறண்டு அங்கு அந்நிய முதாளிகளின் மிகபிரம்மாண்டமான ஆலைகள் என்று தமிழ் நாட்டின் சுற்று புறச்சூழல் கெட்டுமனிதர்கள் வாழ தகுதியில்லாத அளவுக்கு சுகாதார கேடுகள் நிறைந்து காணப்படுகிறது.

தமிழர்களின் கலாசாரத்தை அழித்து, பண்பாட்டை அழித்து வடஇந்திய ஹிந்தி மொழி தமிழகத்தை ஆட்சி செய்கிறது. எங்கும் வறட்சி, உணவு பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை. கேரளாவும், கர்நாடகாவும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை சுத்தமாக நிறுத்தி விட்டன. தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் வளங்களை அந்நிய கார்பெரெட் நிறுவனங்கள் தங்களது தொழில் சாலைகளுக்கு பயன்படுத்தி கொண்டன.

நமது ஊர்களில் இருந்த சிறு பெட்டி கடைகள், டீ கடைகள், காய்கறி கடைகள்  காணமல் போயி அங்கு ஸ்டோர்பக், வால்மார்ட் போன்ற அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்தன. தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானார்கள். இந்த இருளை விளக்க ஒரு இளைஞசர் கூட்டம் புறப்பட்டது அவர்கள்தான் நமது கதையின் காதாநாயகர்கள்!  அவர்கள் என்ன செய்தார்கள் என்ன மாறுதல்கள் நடந்தன, எப்படி தனித்தமிழ் தேசம் கண்டார்கள் என்பதை சொல்கிற வரலாறாக மாறப்போகும் காவியம்.

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1).

இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் என்கிற அழகிய எழிலில் கொஞ்சும் ஊர்.  இந்த ஊர் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆகும். பெரியபட்டினத்தை சார்ந்த முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள்தான் நமது வரலாற்று ஆவணத்தின் காதாநாயகர்கள். ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் பள்ளி பருவம் முதல் நெருங்கிய நண்பர்கள்.

நண்பர்களுக்கு என்ன நடந்தது! எப்படி இவர்கள் வரலாறாய் மாறப்போகிறார்கள் என்பதை பற்றி அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை.                                                                                       தொடரும்..........