Nov 22, 2014

இராமாயண குரங்குகளின் நர்த்தனம்!

நவம்பர் 23/14: உலக இந்து மாநாட்டை துவக்கி வைத்து பேசிய விசுவ இந்து பரிசத் என்கிற ஹிந்து மதவெறி அமைப்பின்  தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்து இந்தியாவை ஆட்சி செய்கிறார் என்று பேசினார்.
டெல்லியை தலைநகராக கொண்டு இந்தியாவை ஆண்ட கடைசி இந்து மன்னர் பிருதிவிராஜ் சவுகான் ஆவார். அவருக்கு பிறகு நரேந்திரமோடி என்கிற RSS இந்து இயக்கத்தின் வழித்தோன்றல் மூலம் நமக்கு மீண்டும் இந்து ஆட்சி திரும்ப கிடைத்துள்ளது என்றார்.
மேலும் உலகின் நலனுக்கு வெல்ல முடியாத இந்துத்துவம் தேவை என்றார். 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 1500 க்கும் அதிகமான இந்துத்துவா பயங்கரவாத பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
சிந்திக்கவும்: ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? மக்கள் நிம்மதியாக, நலமாக இருந்தால் சரி. இந்து மதத்தின் பெயரால் மதவெறியை தூண்டி பல்வேறு கலவரங்களை நடத்தி அதன் மூலம் ஆட்சியை பிடித்திருக்கும் இவர்கள் நோக்கம்தான் என்ன?

சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவை ஆண்ட காந்தி, நேரு தொடங்கி நரசிம்மராவ் வரை யாரும் இந்துக்கள் இல்லையா? இந்தியாவில் வாழும் இந்துக்களில் 1சதவீதம் பேர் RSS. VHP போன்ற இந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அங்கத்தவர்களாக இருப்பார்களா?? அதுகூட இல்லை. இவர்களை ஏற்று கொள்ளாத இந்துக்களே அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை.

காங்கிரஸ், போலி கம்னிஸ்ட் மற்றும் பிராந்திய கட்சிகளின் தவறான பொருளாதார கொள்கைகளாலும், முரணான அரசியலாலும் வெறுப்படைந்த மக்கள் ஒரு மாற்றாக வேறு வழியில்லாமல் மோடிக்கு வாக்களித்துள்ளனர் இதானால் இந்துக்களும், இந்தியர்களும் மோடியை விரும்புகிறார்கள் என்று நினைத்து கொண்டு இந்த இராமாயண குரங்குகள் நர்த்தனம் ஆடுகின்றன. இந்த ஆணவ நர்த்தனத்தின் ஒரு பகுதியே அசோக் சிங்களின் பேச்சு.  சரியான ஒரு மாற்று உருவானால் மோடி தூக்கி வீசப்படுவார் என்பதை வரும் காலங்கள் நமக்கு உணர்த்தும். 

2 comments:

Anonymous said...

Dear Editor,

This is not from Mr.Modi. See greetings coming world top most country. Like you many people i found they are not satisfy from anybody. Satist people.

Anonymous said...

NEENGA MOODUNGA