இந்த இளவல் இன்று உயிருடன் இல்லை.தொப்பி அணிந்திருந்தார். தாடி வைத்திருந்தார் என்பதற்காகவே இவரைத் துடிதுடிக்க அடித்தே கொன்று விட்டார்கள்.
சிவாஜியை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டது நிகில் டிங்கோடே என்கிற இந்து இளைஞர். நிஹால் கான் என்கிற முஸ்லிம் பெயரில் அவர் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ஒரு பாவமும் அறியாத முஹ்சின், இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முஹ்சின் கொல்லப்பட்டுவிட்டதுதான் கொடுமை.
இறைவன் அவருக்கு சுவனத்தில் உயர்ந்த பீடங்களைத் தந்தருள்வானாக. அவருடைய பிரிவால் வாடி நிற்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.
கொன்றவர்கள் ‘முதல் விக்கெட்டை வீழ்த்திவிட்டோம்’ என்று குறுந்தகவல் வேறு பரிமாறிக் கொண்டார்கள்.

நாடு எங்கே போகின்றது? இந்தக் கொடுமையைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகின்றோம்?
இந்த வேளையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மௌலானா முஹம்மத் சிராஜுல் ஹஸன் அவர்கள் சொன்ன முத்தான மூன்று யோசனைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.
1. Maayus na ho jao. விரக்தி அடையாதீர்கள். நிராசை அடையாதீர்கள். இந்த இளவலைக் கொன்றவர்களைப் போன்ற கொடூர மனம் கொண்டவர்கள் வெகு சிலரே. நாட்டு மக்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நல்லிதயம் கொண்டவர்களே. இணக்கத்தையும் அமைதியையும் விரும்புகின்றவர்களே.
2. Mar'oob na ho jao. அடங்கிப் போகாதீர்கள். கொடுமையைப் பார்த்து கொடூரத்தின் வீர்யத்தைக் கண்டு, கொடூரனின் எழுச்சியைப் பார்த்து மலைத்துப் போகாதீர்கள். இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையும் கொண்டிருங்கள். சோர்ந்து போகாதீர்கள்.
2. Mushta'al na ho jao. ஆவேசப்படாதீர்கள். பதற்றப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். ஆத்திரப்படாதீர்கள். ஆவேசப்படுவதாலோ, பதற்றப்படுவதாலோ, கோபப்படுவதாலோ ஆகப் போவது ஒன்றுமில்லை. திட்டித் தீர்ப்பதாலும், ஆவேசப்படுவதாலும் எந்தப் பயனும் இல்லை. நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். நிதானம் இழக்காதீர்கள்.

இந்த மூன்றும்தாம் இப்போது தேவை. இந்தக் கொடுமையைத் தடுக்க என்ன செய்யப் என்ன செய்யப்போகிறீர்கள் இஸ்லாமியர்களே?.
2 comments:
நீதி்நிலை பெறும்...
Good post. The Caption may be refined and the last line removed in tune with the core of the post.
Post a Comment